இந்த வாரம் என்ன?
ஜூலை 15: சனீஸ்வரர் வழிபாட்டு நாள், திருப்பதி ஏழுமலையான் மைசூரு மண்டபம் எழுந்தருளல்
ஜூலை 16: முகூர்த்தநாள், அஷ்டமி விரதம், பைரவருக்கு வடைமாலை அணிவித்து வழிபடுதல், சபரி மலையில் இன்று முதல் ஆறுநாள் நடை திறப்பு, ராமேஸ்வரம் சேதுமாதவர் சன்னதிக்கு விநாயகர் எழுந்தருளல், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் பவனி
ஜூலை 17: ஆடி மாதப்பிறப்பு, தட்சிணாயன புண்ணிய காலம், நதிகளில் புனித நீராடுதல், திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர், ராமநாத புரம் மாவட்டம் நயினார் கோவில் நாகநாதர், திருவாடானை சினேகவல்லியம்மன், ராமேஸ்வரம் பர்வதவர்த்தினியம்மன் கோயில்களில் ஆடிப்பூர உற்ஸவம் ஆரம்பம்
ஜூலை 18: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மாரியம்மன் பூப்பல்லக்கு, கரிநாள்
ஜூலை 19: ஆடி கார்த்திகை, முருகனுக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல், ஏகாதசி, பெருமாளுக்கு துளசிமாலை அணிவித்து வழிபடுதல், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ஆடிப்பூர உற்ஸவம் ஆரம்பம்
ஜூலை 20: நாகப்பட்டினம் நீலாயதாட்சியம்மன் பவனி
ஜூலை 21: பிரதோஷம், மாத சிவராத்திரி, ராமேஸ்வரம் பர்வதவர்த்தினியம்மன் தங்கப்பல்லக்கு