திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடி கார்த்திகை பூஜை
ADDED :3328 days ago
திருமலைக்கேணி: சாணார்பட்டி அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடி மாத கார்த்திகையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. சுவாமிக்கு பால், சந்தனம், இளநீர், பன்னீர், தயிர், தேன், விபூதி, திருமஞ்சணம் உள்ளிட்ட அபிஷேகங்கள் நடந்தது. மலர் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனையும் நடந்தது. மாலையில் சுவாமி புறப்பாடு மற்றும் நகர்வலம் நடந்தது. நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோயில் உள்ள தண்டபாணி சுவாமிக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தன. சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.