புன்னைநல்லூரில் முத்துப்பல்லக்கு!
ADDED :3164 days ago
அற்புத பலன்களை அள்ளி வழங்கும் மகத்துவமான திருத்தலம் தஞ்சை மாவட்டத்தில் உள்ள புன்னைநல்லூர், இங்கே கோயில்கொண்டிருக்கும் அன்னை மாரியம்மன், வேண்டுபவருக்கு வேண்டிய வரங்களை வழங்கும் கற்பகத்தருவாகத் திகழ்கிறாள். இக்கோயிலில் நிகழும் முத்துப்பலக்கு வைபவத்தைத் தரிசிப்பதால் விசேஷ பலன்கள் கைகூடும். இந்த வருடம் அருள்மிகு முத்துமாரியம்மனுக்கு 94 வது ஆண்டாக முத்துப்பலக்குப் பெருவிழா சிறப்புடன் நடைபெறவுள்ளது. 13.8.17 முதல் 15.8.17 வரை நடைபெறும் இவ்விழாவையொட்டி, விடையாற்றி விழாவும் நடைபெறும். பக்தர்கள் இந்த விழா வைபவங்களில் கலந்துகொண்டு மாரியம்மனைத் தரிசித்து மனமுருக வழிபட்டு வந்தால், வாழ்வில் இன்னல்கள்யாவும் நீங்கி நன்மைகள் பெருகும்.