உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூர திருவிழா: 23ல் ஐந்து கருடசேவை

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூர திருவிழா: 23ல் ஐந்து கருடசேவை

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்கோயிலின் ஆடிப்பூர திருவிழா சிறப்பாக நடைபெற்றுவருகிறது. விழாவின் முதல் நாளில் முதல் நாளில் 16 வண்டி சப்பரத்தில் ஆண்டாள் ரெங்கமன்னார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

விழாவின் ஐந்தாம் நாளான ஜுலை 23ம் தேதி இரவு 10 மணிக்கு ஐந்து கருடசேவை நடக்கிறது. முன்னதாக காலை 10 மணிக்கு திருஆடிப்பூர பந்தலுக்கு பெரியாழ்வார் எழுந்தருளி, பெரியபெருமாள், சுந்தரராஜப்பெருமாள், ஸ்ரீனிவாசப்பெருமாள், திருத்தங்கல் அப்பன், ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு மங்களாசாசனம் செய்யும் வைபவம் நடக்கிறது. அதன்பின் மண்டபம் எழுந்தருளுகின்றனர். இரவு 10 மணியளவில் ஆடிப்பூரபந்தலில் ஐந்துகருடசேவை நடக்கிறது. இரவு புறப்பாட்டின்போது சுற்றியுள்ள கிராமங்களின் பாகவத பக்தர்களால் நாமசங்கீர்த்தன பஜனைகள் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், செயல்அலுவலர் ராமராஜா மற்றும் அறநிலையத்துறையினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !