உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பந்தலுார் ஆற்றங்கரையில் முன்னோர்களுக்கு திதி

பந்தலுார் ஆற்றங்கரையில் முன்னோர்களுக்கு திதி

பந்தலுார்: பந்தலுார் அருகே, பொன்னானி மகா விஷ்ணு கோவிலை ஒட்டிய, ஆற்றங்கரையில் மறைந்த முன்னோருக்குதிதி கொடுத்தனர். பொன்னானி மகா விஷ்ணு கோவிலில் நேற்று காலை , 5:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு ஆடி அமாவாசை சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து, கோவில் குருக்கள் சதீஷ், மனோகர்ஆகியோர் தலைமையிலான குழுவினர், கோவிலை ஒட்டிய ஆற்றங்கரையில், மறைந்த முன்னோர்களுக்கு திதி வழங்கினர். இதில், அனைத்து தரப்பு பொதுமக்களும் பங்கேற்று, தங்கள் முன்னோர் பெயர்களில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். காலை , 5:00 மணி முதல் கோவில் வளாகத்தில் கூடிய பொதுமக்கள் மதியம் 11:30மணி வரை நடந்த திதி வழங்கினர். இந்த நிகழ்ச்சியில், பொன்னானி, குந்தலாடி, பந்தலுார், கூடலுார், சேரம்பாடி, பந்தலுார், பிதர்காடு, பாட்டவயல், நம்பியார்குன்னு, அய்யன்கொல்லி, உப்பட்டி, அத்திக்குன்னா, கொளப்பள்ளி, சேரங்கோடு, நெலாக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !