உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூம்புகார் சங்கமத்துறையில் ஆடி அமாவாசை வழிபாடு

பூம்புகார் சங்கமத்துறையில் ஆடி அமாவாசை வழிபாடு

மயிலாடுதுறை: நம் முன்னோர்கள் நினைவாக மாதம் தோறும் அமாவசை அன்று திதி கொடுத்து வழிபாடு நடத்துவது வழக்கமாகும். ஆனால் நவீன காலத்தில் மாதம்தோறும் வழிபாடு நடத்த முடியா தவர்கள் ஆடி, தை மற்றும் மகாளய அமாவாசை அன்று முதாதையர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டால் சிறப்பான வாழ்க்கை அமையும் என்பது இந்துக்களின் நம்பிகையாக உள்ளது.

ஆடி அமாவாசையான நேற்று நாகை மாவட்டம் பூம்புகாரில், காவிரி கடலோடு கலக்குமிடமான சங்கமத் துறையில் ஆயிரக்கணக்கானோர் தங்களது முதாதையர் நினைவாக தர்பணம் செய்து காவிரி மற்றும் கடலில் புனித நீராடி வழிபட்டனர். சுமங்கலிப்பெண்கள் எலுமிச்சை பழம், தேங்காய், வெற்றிலை, பாக்கு, மஞ்சள் உள்ளிட்ட மங்கலப்பொருட்களை சங்கமத் துறையில் தண்ணிரில் விட்டு வழிபாடு நடத்தினர். மேலும் அங்குள்ள ரத்தினபுரனேஸ்வரி கோயிலில் அம்மனுக்கு மாவிளக்கு இட்டு பெண்கள் வழிபாடு நடத்தினர். ஆடி அம்மாவா சையை முன்னிட்டு பார்த்தன்பள்ளி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் மேள, தாளங்களுடன் புறப்பட்டு வந்து சங்கமத்துறையில் தீர்த்தவாரி செய்தார். ஆடி அம்மாவாசையை முன்னிட்டு ஏ ராளமான போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கபட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !