நம்பினால் நல்லது நடக்கும்
ADDED :3156 days ago
நல்ல நிலைக்கு வர வேண்டுமானால், கடவுளை நேரில் வரவழைத்து தான் அவரிடம் பேச வேண்டும் என்ற அவசியமில்லை. அவரிடம் நம்பிக்கை வைத்தாலே போதும், அவரை நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கும். யவீரு என்பவர் ஜெப ஆலயம் ஒன்றின் தலைவராக இருந்தார். இவரது மகளுக்கு கொடிய வியாதி இருந்தது. இப்பெண்ணை குணமாக்க இயேசு சென்றார். செல்லும் வழியில் மற்றொரு பெண் இயேசுவைப் பின் தொடர்ந்தாள். இவளும் நோயால் அவஸ்தைப்பட்டு வைத்தியரிடம் பெரும் பணத்தை தொலைத்தவள். இவள் இயேசுவைப் பின் தொடர்ந்த போது, “ஆண்டவரே! நீர் என்னைத் தொட்டு சுகமாக்கும் என கேட்கவில்லை. “நான் அவருடைய ஆடையின் ஓரத்தை தொட்டால் கூட குணமாகி விடுவேன், என நம்பினாள். அந்த நம்பிக்கை அவளை குணமாக்கியது. ஆண்டவர் மீது நம்பிக்கை பல நன்மைகளை நமக்குத் தரும்.