உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஏர்வாடியில் சந்தனக்கூடு விழாவிற்கான மவுலீது துவக்கம்

ஏர்வாடியில் சந்தனக்கூடு விழாவிற்கான மவுலீது துவக்கம்

கீழக்கரை: ஏர்வாடியில் சுல்தான் செய்யது பாதுஷா நாயகம் தர்கா பிரசித்தி பெற்றதாகும். மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக ஒவ்வொரு ஆண்டும் சந்தனக்கூடு விழா நடக்கும். 843 ம் ஆண்டிற்கான உரூஸ் எனும் சந்தனக்கூடுவிழாவிற்கான மவுலீது ஓதும் நிகழ்ச்சி நேற்று மாலை 6:30 மணிக்கு தர்காவில் நடந்தது. கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான யாத்ரீகர்கள் கலந்து கொண்டு உலக நன்மைக்கான துஆ செய்தனர். தொடர்ந்து 23 நாட்களுக்கு மவுலீது ஓதும் நிகழ்ச்சி நடைபெறும். வருகிற ஆக. 2 (புதன்கிழமை) அன்று மாலை 5:00 மணியளவில் அடிமரம் நடுதலும், மறுநாள் ஆக., 3 (வியாழக்கிழமை) அன்று மாலை 5:30 மணிக்கு கொடியேற்றமும் நடக்கும். ஆக. 15 (செவ்வாய்கிழமை) மாலை முதல் மறுநாள் அதிகாலை 3:௦௦ மணிக்கு சந்தனக்கூடு ஊர்வலமும், ஆக. 16 (புதன்கிழமை) அதிகாலை 4 மணியளவில் மக்பராவில் புனித சந்தனம் பூசும் நிகழ்ச்சியும் நடக்கும். ஏற்பாடுகளை ஹக்தார் கமிட்டியினர், விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !