உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சர்ப்பதோஷம் விலகும்!

சர்ப்பதோஷம் விலகும்!

மதுரை மேல மாசி வீதி  தெற்கு மாசி வீதி சந்திப்பில் உள்ள மதன கோபால சுவாமி கோயிலில் உள்ள அரச மரத்தடியில் ஹரிஹர சர்ப்பராஜா சிலை உள்ளது. பிணைந்துள்ள இரு பாம்புகளுக்கு நடுவில் மேலிருந்து கீழாக பெருமாள், மகாலட்சுமி, அனுமன் மற்றும் கருடனும்; பின்புறம் மேலிருந்து கீழாக சிவலிங்கம், பார்வதி, விநாயகர், சுப்ரமணியரும் தரிசனம் தருகின்றனர். சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக திகழும் இந்தச் சிலைக்கு வெள்ளிக்கிழமைகளில் ராகுகால பூஜை செய்தால் சர்ப்பதோஷம் விலகுகிறது என்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !