உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிருஷ்ணகிரியில் ஆடிப்பூரம் திருவிழா: பால்குட ஊர்வலம்

கிருஷ்ணகிரியில் ஆடிப்பூரம் திருவிழா: பால்குட ஊர்வலம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், ஆடிப்பூரம் திருவிழாவையொட்டி, கோவில்களில் பால்குட ஊர்வலம் நடந்தது. கிருஷ்ணகிரி பழையபேட்டை நரசிம்மசாமி கோவில் தெருவில் உள்ள ஏகாம்பரேஸ்வர காமாட்சியம்மன் கோவிலில், நேற்று காலை, 7:00 மணிக்கு கோ பூஜை நடந்தது. காலை, 10:00 மணிக்கு பெண்கள் பால்குடங்களை ஊர்வலமாக எடுத்துக் கொண்டு, கோவிலுக்கு வந்தனர். பின்னர் அம்மனுக்கு அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து, இரவு, 8:00 மணிக்கு, அம்மன் நகர் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதேபோல், கிருஷ்ணகிரி பழையபேட்டை நேதாஜி ரோடு, கடைவாசல் மாரியம்மன் கோவிலில், 34ம் ஆண்டு ஆடிப்பூரம் திருவிழா, கடந்த, 23ல் துவங்கியது. நேற்று காலை, 6:00 மணிக்கு மகா ருத்ர ஹோமம் நடந்தது. பின், கோவிலிருந்து பால் குடங்களை எடுத்துக் கொண்டு, நகரின் முக்கிய வீதிகள் வழியாக பெண்கள் ஊர்வலமாக சென்று கோவிலுக்கு வந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் மற்றும் தீபாராதனையும் நடந்தது. இரவு, 8:00 மணிக்கு, அம்மன் திருவீதி உலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !