உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செல்லியாண்டியம்மன் கோவிலில் ஆடிப்பூரம்: அம்மனுக்கு 108 குடம் பால் அபிஷேகம்

செல்லியாண்டியம்மன் கோவிலில் ஆடிப்பூரம்: அம்மனுக்கு 108 குடம் பால் அபிஷேகம்

பவானி: பவானி செல்லியாண்டியம்மன் கோவிலில், 8ம் ஆண்டு ஆடிப்பூரம் திருவிழா நேற்று நடந்தது. விழாவில், கூடுதுறையில் இருந்து, 108 குடங்களில் பால் எடுத்து, நேற்று காலை பெண்கள் ஊர்வலமாக சென்றனர். அதன்பின், செல்லியாண்டியம்மனுக்கு, பால் அபிஷேகம் மற்றும் பல்வேறு திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின் சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. பூஜை முடிவில், பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு அம்மன் திருவீதி உலா நடந்தது. ஆடிப்பூர திருவிழா குழுவினர், இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

* இதேபோல், ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு, கோபி ஈஸ்வரன் கோவிலில், விசாலாட்சி அம்மனுக்கு வளைகாப்பு உற்சவம் நடந்தது. இதில், ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு, அம்மனுக்கு வளையல்கள் அணிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !