பழநியில் ராகு,கேது பெயர்ச்சி சிறப்பு பூஜை
பழநி, பழநி பெரியநாயகியம்மன் கோயில், பெரியாவுடையார் கோயில்களில் ராகு, கேது பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. பெரியநாயகியம்மன்கோயில், செல்வசுப்பிரமணியம் குருக்கள் தலைமையில் நவக்கிரக சன்னதியில் ராகு,கேது பகவான்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். வெள்ளிக்கவச அலங்காரத்தில் அர்ச்சனை, தீபாராதனை நடந்தது. உளுந்தம் பருப்பு கலந்த சாதம், பொங்கல் பிரசாதமாக வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் வழிப்பட்டனர். ஏற்பாடுகளை இணை ஆணையர் ராஜமாணிக்கம், துணை ஆணையர் மேனகா செய்தனர். மேலும் பழநியை சுற்றியுள்ள நவக்கிரகங்கள் உள்ள கோயில்களில் ராகு,கேது பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, பரிகார பூஜைகள் நடந்தது.
சின்னாளபட்டி: சின்னாளபட்டி அஞ்சலிவரத ஆஞ்சநேயர் கோயிலில், ராகு, கேது பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. முன்னதாக, பல்வேறு திரவியங்களால் விசேஷ அபிஷேகம் நடந்தது. விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு சாத்தப்பட்டு, தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
கன்னிவாடி; கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.