காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவில் குளம் சுற்றுச்சுவர் சீரமைப்பு
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவில் குளத்தின் சுற்றுச்சுவர், 12 லட்சம் ரூபாய் செலவில் சீரமைக்கும் பணி வங்கியுள்ளது.காஞ்சிபுரத்தில் சிறப்புற்று விளங்கும் அஷ்டபுஜ பெருமாள் கோவில், வைணவ திருத்தலங்களில், 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக உள்ளது. இக்கோவில் எதிரில் உள்ள குளத்தின் ஒரு பகுதி, கடந்த ஆண்டு, வர்தா புயல் மழையில் இடிந்து விழுந்தது. அதை சீரமைக்க, ஏற்கனவே திட்ட மதிப்பீடு தயார் செய்து, அறநிலைய துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதற்கான அனுமதி கிடைக்காததால் பணி துவங்காமல் கிடப்பில் இருந்தது. சுற்றுச்சுவருக்கான அனுமதி கிடைத்ததையடுத்து, அதன் பணி தற்போது துவங்கியுள்ளது. இது குறித்து, கோவில் அதிகாரி ஒருவர் கூறுகையில், குளத்தின் சுற்றுச்சுவர் பணி மொத்தமாக செய்ய முடியாது. அதை மூன்று பிரிவாக செய்தால் தான் பலமாக இருக்கும். அதற்காக, தனித்தனி பகுதியாக வேலை நடந்து வருகிறது, அடுத்த மாதம் பணி முடிந்துவிடும் என்றார்.