உத்தமபாளையம் கோயிலில் ராகு -கேது பெயர்ச்சி பூஜை
உத்தமபாளையம், உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் ராகுகேது பெயர்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய் தனர். உத்தமபாளையத்தில் காளாத்தீஸ்வரர் கோயிலில் ராகுகேது தம்பதி சமேதராக தனித் தனி சன்னதிகளில் எழுந்தருளியுள்ளனர். நேற்று மதியம் 12:30 மணிக்கு ராகு கேது பெயர்ச்சி நடைபெற்றது. ராகு சிம்மத்திலிருந்து கடக ராசிககும், கேது கும் பத்திலிருந்து மகரத்திற்கும் பெயர்ச்சி ஆயினர். இக்கோயிலில் நடந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பரிகார ராசிக்காரர்கள் சிறப்பு ஆராதனைகள் மற்றும் பூஜைகள் செய்தனர். ராகு கேது தம்பதி சமேத ராக சிறப்பு அலங்காரத் தில் அருள்பாலித்தார். சிறப்பு பூஜைகளில் மதுரை மண்டல அற நிலையத்துறை இணை ஆணை யர் இரா.பச்சையப்பன், செயல்அலுவலர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அன்னதான ஏற்பாட்டை கம்பம் கே.ஆர்.ஜெயப்பாண்டியன் குடும்பத்தினர் செய்திருந்தனர்