உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிங்கம்புணரி காமாட்சி பரமேஸ்வரி அம்மன் கோயில் ஆடித்திருவிழா

சிங்கம்புணரி காமாட்சி பரமேஸ்வரி அம்மன் கோயில் ஆடித்திருவிழா

சிங்கம்புணரி, சிங்கம்புணரி அருகே வேட்டையன்பட்டியில் காமாட்சி பரமேஸ்வரி அம்மன் கோயில் ஆடித் திருவிழா ஜூலை 25ம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி காலை 10:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தார். 10:30 மணிக்கு அம்மனுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஐந்து நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் ஜூலை 29ம் தேதி ஊஞ்சல் தரிசனமும் ஆரத்திகுட வழிபாடும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !