உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடி இரண்டாம் வெள்ளி: அம்மன் கோயில்களில் குவிந்த பக்தர்கள்

ஆடி இரண்டாம் வெள்ளி: அம்மன் கோயில்களில் குவிந்த பக்தர்கள்

மதுரை: ஆடி இரண்டாவது வெள்ளியை முன்னிட்டு , அம்மன் கோயில்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.

தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில், ஆடி இரண்டாவதுவெள்ளியை முன்னிட்டு , அம்மனுக்கு சிறப்பு அபஷேகம்,பூஜைகள் செய்யப்பட்டு, அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். காலை முதல் பெண் பக்தர்கள் அம்மனுக்கு நெய் விளக்கு ஏற்றி , வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.  சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் கோயிலிலும் சிறப்பு பூஜை நடந்தது. மடப்புரம் காளி கோயிலில் வழக்கத்தை விட கூட்டம் அலைமோதியது. பெண்கள் மஞ்சள் புடவையுடன் வேண்டுதல் செய்தனர். இதேபோல் திருப்பூர், ஓலப்பாளையம் ராமலிங்க சவுடேஸ்வரியம்மன், குமார் நகர் சாரதாம்பாள், மங்கலம் ரோடு பட்டத்தரசியம்மன், ஷெரீப்காலனி காமாட்சியம்மன் கோயில்களில் ஆடி இரண்டாவது வெள்ளியை முன்னிட்டு, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !