காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகலம்
ADDED :2992 days ago
காளையார்கோவில்: காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர் சொர்ணவள்ளி அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. காளையார்கோவில் சொர்ணவள்ளி அம்மன் கோயிலில்ஆடிபூரம் உற்சவ விழா ஜூலை 17 ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்று வருகிறது. இன்று காலை 8:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. 12:00 மணிக்கு பெருமாள் அழைப்பு நடந்தது. சுவாமி அம்பாள் திருமண அலங்காரத்தில் ஊஞ்சலில் எழுந்தருளினார். காளீஸ்வரக்குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியர்கள் வேதமந்திரங்கள் முழங்க, திருமறை, வேத பாராயணங்களுடன் 12:30 மணிக்கு திருக்கல்யாண நிகழ்வு நடைபெற்றது. பெண்களுக்கு திருமாங்கல்ய பிரசாதங்கள் வழங்கப்பட்டது.