உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பூர் பத்திரகாளியம்மன் கோவிலில் வளைகாப்பு நிகழ்ச்சி

திருப்பூர் பத்திரகாளியம்மன் கோவிலில் வளைகாப்பு நிகழ்ச்சி

திருப்பூர் : ஆடி வெள்ளியை முன்னிட்டு, திருப்பூர் கொங்கு மெயின் ரோடு, அருள்ஜோதி நகர் பத்திரகாளியம்மன் கோவிலில், கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. பத்ரகாளியம்மன், மாரியம்மனுக்கு வளையல், பூ மற்றும் எலுமிச்சை மாலையால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. சுற்றுப்புற பகுதியை சேர்ந்த கர்ப்பிணிகளுக்கு, மாலையிட்டு, கை நிறைய வளையல் அணிவிக்கப்பட்டது. குழந்தை ஆரோக்கியத்துடன் பிறக்க, குடும்பத்தில் ஒற்றுமை நிலைக்க, சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. பூஜையை தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !