நவதானிய அலங்காரத்தில் சவுடேஸ்வரியம்மன் அருள்பாலிப்பு
ADDED :3050 days ago
குன்னுார்: குன்னுார் சவுடேஸ்வரியம்மன் கோவிலில், நவதானிய அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்.குன்னுார் மவுன்ட் ரோடு பகுதியில் உள்ள சவுடேஸ்வரியம்மன் கோவிலில், ஆடி மாத திருவிழா கடந்த, 21ம் தேதி துவங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. விழாவையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷே கம், அலங்காரம், மகா தீபாராதனை, பிரசாத வினியோகம் ஆகியவை நடந்தன. நேற்று முன்தினம், ராகுகேது பெயர்ச்சி சிறப்பு ஹோமம் நடந்தது. நேற்று, அம்மனுக்கு, நவதானியங்கள் உட்பட பல வகையான தானிய வகைகளில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து மகா தீபாராதனை, அன்னதானம் ஆகியவை நடந்தன. வரும், 3 ம்தேதி ஆடிபெருக்கு, 4ம் தேதி வரலட்சுமி விரதம் ஆகியவை நடக்கின்றன.விழா ஏற்பாடுகளை கோவில் அர்ச்சகர் குணா சாஸ்திரி மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.