உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / போடி கோயில்களில் ஆடிவெள்ளி சிறப்பு பூஜை

போடி கோயில்களில் ஆடிவெள்ளி சிறப்பு பூஜை

போடி, ஆடிவெள்ளியை முன்னிட்டு அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை, தீபாராதனைகள் நடந்தது. போடி அருகே விசுவாசபுரம் பத்திரகாளியம்மன் கோயிலில் அம்மனுக்கு ஆப்பிள், மாதுளை, எலுமிச்சை உள்ளிட்ட பழங்களினால் கனி அலங்காரம் செய்யப்பட்டு, அபிேஷகம், தீபாராதனை நடந்தது. மழை வேண்டி அம்மனுக்கு கூழ்காய்ச்சி பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.

* போடி குலாலர்பாளையம் காளியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. பெண்கள் எலுமிச்சையில் தீபம் ஏற்றி வழிபட்டனர்.
* போடி மேலத்தெரு சவுடேஸ்வரி அம்மன், நந்தவனம் காளியம்மன், சாலைக்காளியம்மன், சுப்பிரமணியர் கோயில் துர்க்கை அம்மன் உட்பட கோயில்களில் பக்தர்கள் கூழ்காய்ச்சி வழிபட்டனர்.
* போடி அருகே மலைமீதுள்ள வடமலைநாச்சியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.
சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்.
*பெரியகுளம்,லட்சுமிபுரம் காளியம்மன் கோயிலில் ஆடிவெள்ளியை முன்னிட்டு, மழைவேண்டி சிறப்பு பிரார்த்தனை நடந்தது. ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். பக்தர்களுக்கு கூழ்,சர்க்கரை பொங்கல் பிரசதமாக வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கிராமகமிட்டியினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !