பாதயாத்திரை பக்தர்களுக்கு ஒளிரும் ஸ்டிக்கர், சட்டை
ADDED :2995 days ago
மொடக்குறிச்சி: ஈரோடு, திண்டல் முருகன் பழநி பாதயாத்திரை குழுவில், 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் உள்ளனர். இவர்கள் பழநி கோவிலுக்கு செல்ல, கடந்த ஒரு மாதமாக விரதம் மேற்கொண்டனர். இதையடுத்து, 26வது ஆண்டாக, பழநிக்கு பாதயாத்திரை தொடங்கினர். திண்டல், பாரி நகர் விநாயகர் ஆலயத்தில் இருந்து புறப்படும் இவர்கள் வெள்ளோடு, சென்னிமலை, காங்கேயம், தாராபுரம் வழியாக பழநி செல்கின்றனர். இரவு நேரத்தில், விபத்து ஏற்படாமல் தவிர்க்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். வெள்ளோடு வழியாக, நேற்று சென்றனர். அவர்களுக்கு வெள்ளோடு போலீசார், விபத்து குறித்த அறிவுரை வழங்கினர். பின், ஒளிரும் ஸ்டிக்கர், சட்டை மற்றும் பனியன் வழங்கினர்.