பட்டத்தரசியம்மன் கோவிலில் ஆடி கஞ்சி கலய திருவிழா
ADDED :3050 days ago
திருப்பூர்: திருப்பூர், பாப்பநாயக்கன்பாளையம், வேப்பமரத்து பட்டத்தரசியம்மன் கோவிலில், மூன்றாம் ஆண்டு, ஆடி கஞ்சி கலய திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி, நேற்று காலை, 06:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜை நடந்தது. அதன்பின், கஞ்சி கலயம் மற்றும் மாவிளக்கு எடுத்து பெண்கள் ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து, மதியம், 12:00 மணிக்கு பட்டதரசியம்மனுக்கு கஞ்சி படைக்கப்பட்டு, அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்பட்டது. எலுமிச்சை மற்றும் மலர் மாலைகளால் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடந்தன. விழாவையொட்டி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஆடி கஞ்சி கலய விழா ஏற்பாடுகளை,ஓம் சக்தி மகளிர் குழுவினர், அய்யப்ப பக்தர்கள் குழுவினர் செய்திருந்தனர்.