உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பத்ரகாசி விஸ்வநாதேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

பத்ரகாசி விஸ்வநாதேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

ஓசூர்: ஓசூர் பத்ரகாசி விஸ்வ நாதேஸ்வர சுவாமி கோவில் கும்பாபி?ஷக விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். ஓசூர், பாகலூர் சாலையில் உள்ள டீச்சர்ஸ் காலனியில், ராஜகணபதி, அன்னபூர்ணேஸ்வரி சமேத பத்ரகாசி விஸ்வநாதேஸ்வர சுவாமி கோவில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இக்கோவில் கும்பாபி?ஷகம், நேற்று காலை நடந்தது. விழாவை யொட்டி, கடந்த, 28 மாலை, 5:00 மணிக்கு, கணபதி பூஜை, யாகசாலை பிரவேசம், வாஸ்து, பூர்ணாகுதி, தீர்த்த பிரசாத வினியோகம் நடந்தது. நேற்று முன்தினம் காலை, 8:00 மணிக்கு கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், சாந்தி ஹோமங்கள், மாலை, 5:00 மணிக்கு, கணபதி பூஜை, அதிவாசங்கள், அதிவாசஹோமங்கள், அஷ்டபந்தனம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு கணபதி பூஜை, மூல தேவதா, கலா ஹோமம், பிராண பிரதிஷ்டை, பஞ்சாமிர்த அபி?ஷகம், மங்களாரத்தி, காலை, 8:00 மணிக்கு கும்பாபி?ஷகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !