உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவில்லிபுத்தூர் துளிர் விடும் தளிர்... அறப்பணியில் மாணவர்கள்

ஸ்ரீவில்லிபுத்தூர் துளிர் விடும் தளிர்... அறப்பணியில் மாணவர்கள்

ஸ்ரீவில்லிபுத்தூர்  இன்றைய இளைஞர்களின் சக்தியின் ஆற்றல்கள் சரியான வழியில்
பயன்படுத்தபட்டால் இந்தியா  பல்வேறு வகைகளில் மிகவும் வளர்ச்சியடையும் என்பதற்கு பல இளைஞர்கள் முன்னுதாரணமாக திகழ்கிறார்கள்.    

பிரபல நிறுவனங்களில் மிகவும் உயர்ந்த பணிவாய்ப்பு பெற்று  அதிக சம்பளம் பெறும் இன்றைய இளைஞர்கள், தான் வளர்ந்த சமுதாயத்தில் தன்னால் முடிந்த  அளவிற்கு பல்வேறு பொதுநல பணிகளில் எவ்வித விளம்பரமின்றி உதவி செய்து வருகிறார்கள்.   

அவர்களை போன்று படிக்கும்போதே நல்ல எண்ணங்களை இன்றைய மாணவர்கள் மத்தியில்  ஏற்படுத்தி, அவர்களின் உடல் உழைப்பு மூலம் சமூகத்தில் நிலவும் பல அடிப்படை பிரச்னைகளுக்கு  தீர்வு காணும் விதத்தில் செயல்பட்டு வருகின்றனர்

கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பாலிடெக்னிக்  மாணவர்கள். இவர்கள் தளிர் என்ற பெயரில் இன்றும் துளிர்விடுகின்றனர்.  அதன்படி பல்கலை  வேந்தர் ஸ்ரீதரன், இயக்குனர் சசிஆனந்த்  வழிகாட்டுதலின்படி  கல்லூரி முதல்வர் கருணாநிதி மற்றும் தளிர் இயக்க ஒருங்கிணைப்பாளர்களான பொன்னுச்சாமி,  பாலகிருஷ்ணன், செல்வம் ஆகியோர் தலைமையில் தளிர் இயக்க மாணவர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர்  மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி கோயிலில் தூய்மைப்பணியை மேற்கொண்டனர்.

கோயிலில்  இருந்த அசுத்தங்கள் அகற்றபட்டும், தூசிகள் ஒட்டடை அடித்தும், மரகன்றுகள் நட்டியும் தங்களால்  இயன்ற பொதுநலப்பணிகளை மேற்கொண்டு பொதுமக்களிடம் நற்பெயர் பெற்றனர். மாணவர்களை  கோயில் தக்கார் ராமராஜா, செயல்அலுவலர் நாராயணி  வாழ்த்தினர். தளிர் அமைப்பின்  பணி சிறக்க  98949 09549ல் நாமும் வாழ்த்துவோமே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !