உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னிமலை முருகன் கோவில் தரம் உயருமா? மக்கள் எதிர்பார்ப்பு

சென்னிமலை முருகன் கோவில் தரம் உயருமா? மக்கள் எதிர்பார்ப்பு

சென்னிமலை: கந்தர் சஷ்டி கவசம் அரங்கேற்ற தலமாக போற்றப்படும், சென்னிமலை முருகன் கோவிலுக்கு, ஈரோடு மாவட்ட பக்தர்கள் மட்டுமின்றி, வெளி மாவட்ட பக்தர்களும் அதிகம் வருகின்றனர். இதனால் கோவில் ஆண்டு வருமானம், மூன்று கோடி ரூபாய் அளவில் அதிகரித்துள்ளது. ஆண்டு வருமானம், 50 லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால், முதுநிலை கோவிலாக (உதவி ஆணையர் கிரேடு) அறிவிக்கலாம். ஆனால், தரம் உயர்த்தாமல், காலம் தாழ்த்துகின்றனர். இதனால் போதிய அடிப்படை வசதிகள் செய்ய முடியவில்லை. மலைஅடிவாரத்தில் டிக்கெட் கவுன்டர் இல்லை; பக்தர்கள் மலை மேல் செல்ல பஸ்சுக்கு காத்திருக்க, காத்திருப்பு கூடம் இல்லை. பக்தர்கள் தங்கும் விடுதியில், கோவில் அலுவலகம் செயல்படுகிறது. முதுநிலை கோவிலாக தரம் உயர்த்தி, பக்தர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தர, மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !