இரட்டிப்பு பலன் தரும் புத்தம் புது காலை!
ADDED :3021 days ago
உடல்நலமுடன் வாழ விரும்புவோர் ஆவணி ஞாயிறன்று விரதம் மேற்கொள்வது நல்லது. சூரியன் தன் ஆட்சி வீடான சிம்ம ராசியில் ஆட்சி பலத்துடன் இருக்கும் மாதம் ஆவணி. இந்த ஆண்டு ஆக.20, 27, செப்.3,10 ஆகிய நாட்கள் ஆவணி ஞாயிறாக அமைகின்றன. அன்று காலையில் நீராடி, சூரிய ஹோரை நேரமான 6:00 – 7:00 மணிக்குள் சூரியனை வழிபடுவோருக்கு இரட்டிப்பு பலன் கிடைக்கும். அகத்தியர் ராமருக்கு உபதேசித்த ஆதித்ய ஹ்ருதயம் சொன்னால் எதிரி பயம் நீங்கும். சிவன் கோயிலில் உள்ள சூரிய சன்னதி அல்லது நவக்கிரக மண்டபத்திலுள்ள சூரியனுக்கு தீபமேற்றி வழிபடுவது அவசியம்.