நல்ல சேதி கேட்கணுமா
ADDED :3042 days ago
ஆவணி வளர்பிறை சதுர்த்தியன்று (ஆக.25) மேற்கொள்வது விநாயகர் சதுர்த்தி விரதம். களிமண்ணில் விநாயகர் சிலை வடித்து எருக்கமலர், அருகம்புல் மாலையிட வேண்டும். அவல், பொரி, கொழுக்கட்டை, பழ வகைகளை பிரசாதமாக படைத்து அவ்வையாரின் விநாயகர் அகவல் பாடி வழிபட வேண்டும். விரதமிருப்போர் படையல் தவிர வேறெதுவும் உண்பது கூடாது. இதன் பயனாக மனக்கவலை தீரும். முயற்சியில் இருந்த தடை அகலும். எதிர்பார்த்த நல்ல செய்தி வீடு தேடி வரும்.