திருப்பதியில் புதிய சர்வபூபாள வாகனம்
ADDED :2979 days ago
திருப்பதி: திருமலை திருப்பதியில் வருடாந்திர பிரம்மோற்சவம் வருகின்ற செப் 23ம் தேதி துவங்கி அக். 1ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் செப் 26ம் தேதி இரவு மலையப்பசுவாமி சர்வபூபாள வாகனத்தில் வலம்வருவார். நீண்ட கால பயன்பாட்டில் உள்ள இந்த வாகனம் சிறியதாக இருப்பதால் சற்று பெரியதாக செய்ய முடிவு செய்யப்பட்டது.அதன்படி செய்யப்பட்ட சர்வபூபாள வாகனம் தற்போது தயராக உள்ளது. இந்த புதிய வானத்தில்தான் இந்த வருடம் மலையப்பசுவாமி வலம் வருகிறார்.