பள்ளிப்பட்டு கொள்ளாபுரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா
பள்ளிப்பட்டு: ஆடி திருவிழாவை ஒட்டி, பள்ளிப்பட்டு கொள்ளாபுரியம்மன் கோவிலில், சிறப்பு உற்சவம் நடந்தது. திரளான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். பள்ளிப்பட்டு பேருந்து நிலையம் அருகே உள்ளது கொள்ளாபுரியம்மன் கோவில். இந்த கோவிலில், கங்கையம்மன் ஜாத்திரை மற்றும் ஆடி திருவிழா, மயானகொள்ளை உள்ளிட்டவை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றன. நேற்று முன்தினம், செவ்வாய்க்கிழமை, ஆடி திருவிழாவை ஒட்டி,அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. காலை, 10:00 மணிக்கு, மூலவர் மற்றும் உற்சவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. திரளான பெண்கள், கோவில் வளாகத்தில்
பொங்கல்வைத்து அம்மனுக்கு படைத்தனர். மாலை, 6:00 மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில், உற்சவர் அம்மன் வீதியுலா எழுந்தருளினார். பள்ளிப்பட்டு மற்றும் சுற்றுப்பகுதியைச் சேர்ந்த பக்தர்கள், அம்மனை தரிசனம் செய்தனர்.