சத்திரப்பட்டியில் முளைக்கொட்டு விழா
ADDED :2985 days ago
சத்திரப்பட்டி:சத்திரப்பட்டி சுற்றுப்பகுதி மக்கள் முளைக்கொட்டு திருவிழாவை தீபாவளி விழாவாக கொண்டாடுவர். இப்பகுதி தெருக்களில் யோகமாரியம்மன், செல்லமுளை மாரியம்மன், சடைமாரியம்மன், ஜெய மாரியம்மன், ஆகாச மாரியம்மனை அலங்கரித்து வழிபட்டனர். பத்து நாட்களாக பெண்கள் விரதமிருந்து வளர்த்த முளைப்பாரிகளை ஊர்வலமாக எடுத்து வந்து நத்தம்பட்டி பழைய கிணற்றில் கரைத்தனர். இதை முன்னிட்டு மஞ்சள் நீராட்டு விழா, ஆன்மிக சொற்பொழிவு , வாணவேடிக்கை நடைபெற்றது. இரவில் அம்மன் அலங்கரித்த சப்பரத்தில் ஊர்வலமாக வர வழிபட்டனர். இதையொட்டி வெள்ளிக்கிழமை ஊஞ்சல் சப்பர விழா நடைபெறுகிறது. விழாவை யொட்டி இங்குள்ள பேண்டேஜ் துணி தொழிலாளர்களுக்கு ஒரு வார விடுப்புடன் போனஸ் வழங்கப்பட்டுள்ளது.