உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடி வெள்ளி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் பக்தர்கள் தரிசனம்

ஆடி வெள்ளி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் பக்தர்கள் தரிசனம்

இளையான்குடி, தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி கடைசி வெள்ளியைமுன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. கோயிலை சுற்றி பல்வேறு இடங்களில், பக்தர்கள் கூழ் ஊற்றி தங்களது நேத்திக்கடனை செலுத்தினர். கடைசி ஆடி என்பதால், வழக்கத்தை விட பக்தர்கள் அதிக அளவில் வந்திருந்தனர். நீ்ண்ட வரிசையில் நின்று பக்தர்கள் அம்மனை வணங்கி சென்றனர். காலை முதலே, சுற்று வட்டார கிராமங்களை தவிர, மற்ற ஊர்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தாயமங்கலம் முத்து மாரியம்மனை வணங்கி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !