ஆடி கடைசி வெள்ளியில் கரூர் அம்மனுக்கு சிறப்பு பூஜை
ADDED :2979 days ago
கரூர்: ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, அம்மன் கோவிலில்களில் சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடந்தன. ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி, ஜவஹர் பஜார் மாரியம்மன் கோவில், காந்திகிராமம் ஆதிமாரியம்மன் கோவில், ஊரணி காளியம்மன் கோவில், வேம்பு மாரியம்மன் கோவில் உள்ளிட்ட அம்மன் கோவில்களில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தன. பசுபதிபுரம் வேம்பு மாரியம்மன் கோவிலில், அம்மனுக்கு கண்ணாடி வளையலால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அனைத்து கோவில்களிலும், ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசித்தனர்