சித்தர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் சிவன் அருள்பாலிப்பு
ADDED :5070 days ago
கடலூர் : கடலூர் ஆல்பேட்டை வெட்டவெளி சித்தர் கோவிலில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. கடலூர் ஆல்பேட்டையில் சற்குரு வெட்டவெளி சித்தர் கோவிலில் வலம்புரி விநாயகர், முருகன் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுவதையொட்டி நேற்று முன்தினம், முதல் கால யாக பூஜை நடந்தது. நேற்று காலை வலம்புரி விநாயகர், முருகன் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து பூர்ணாஹூதி, தீபாராதனை, கலசாபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சிவன், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.