உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை மீனாட்சி அம்மன் ஆவணிமூல திருவிழா: ஆக.31ல் சுவாமிக்கு பட்டாபிஷேகம்

மதுரை மீனாட்சி அம்மன் ஆவணிமூல திருவிழா: ஆக.31ல் சுவாமிக்கு பட்டாபிஷேகம்

மதுரை, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆவணி மூல திருவிழா கொடியேற்றம் சுவாமி சன்னதியில் நேற்று நடந்தது. திருவிழா நாட்களில் தினமும் சுவாமி லீலைகள் நடத்தப்படும்.ஆக.,25ல் கருங்குருவிக்கு உபதேசம் செய்யும் லீலை. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு முக்குறுணி விநாயகருக்கு 18 படி அரிசியால் செய்யப்பட்ட கொழுக்கட்டை நெய்வேத்தியம் படைக்கப்படும். ஆக.,26ல் நாரைக்கு முக்தி கொடுத்தல். ஆக.,27ல் மாணிக்கம் விற்ற லீலை.ஆக.,28ல் தருமிக்கு பொற்கிழி அளிக்கும் லீலை. ஆக.,29ல் உலவாக் கோட்டை அருளிய லீலை. ஆக.,30ல் பாணனுக்கு அங்கம் வெட்டிய லீலை. ஆக.,31ல் வளையல் விற்ற லீலையும், சுவாமி சன்னதி ஆறுகால் பீடத்தில் இரவு 6:40 மணிக்கு மேல் இரவு 7:04 மணிக்குள் சுந்தரேஸ்வரருக்கு பட்டாபிஷேகமும் நடக்கிறது.செப்.,1ல் நரியை பரியாக்கிய லீலை, செப்.,2ல் புட்டுக்கு மண் சுமக்கும் லீலை, செப்., 3ல் விறகு விற்ற லீலை, செப்.,4ல் காலை 9:20 மணிக்கு மேல் காலை 9:44 மணிக்குள் சட்டத்தேர் மற்றும். இரவு 7:00 மணிக்கு சப்தாவர்ண சப்பரம் நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !