உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விநாயகரை பாடினால் நினைத்தது நடக்கும்:அநுத்தமானந்தா உறுதி

விநாயகரை பாடினால் நினைத்தது நடக்கும்:அநுத்தமானந்தா உறுதி

மதுரை:"விநாயகரை பாடினால் நினைத்த காரியம் கை கூடும்," என கரூர் சின்மயா மிஷன் ஆச்சார்யா ஸ்வாமி அநுத்தமானந்தா தெரிவித்தார்.மதுரை சின்மயா மிஷன் சார்பில் டி.வி.எஸ்., நகர் கோதண்ட ராமர் கோயிலில் விநாயகர் அகவல் என்ற தலைப்பில் அவர் பேசியதாவது: அவ்வையால் இயற்றப்பட்டது விநாயகர் அகவல். கர்ம, பக்தி, ஞானம் மற்றும் ராஜ யோகங்கள் ஒன்றிணைந்து இருக்கும் அரிய தமிழ் நுால் இது. நாயன்மார்களின் ஒருவரான சுந்தரமூர்த்தி சிவபெருமானை தரிசிக்க கைலாயம் செல்ல நினைத்தபோது, அவரது நண்பர் சேர நாட்டு ராஜாவை உடன் அழைத்து சென்றார். இருவருமே அவ்வையையும் உடன் அழைத்தனர். அவர்களுடன் செல்வதற்காக விநாயகருக்கான பூஜையை வேகமாக மேற்கொண்டார். அப்போது அவர் முன் தோன்றிய விநாயகர், ஏன் அவசரம். அமைதியாக பூஜையில் ஈடுபடுங்கள். உங்களை கைலாயம் கொண்டு நான் சேர்க்கிறேன், என்ற பின், அவ்வை பாடியதுதான் விநாயகர் அகவல். பின்னர் தன் தும்பிக்கையால் அவரை துாக்கி இருவருக்கும் முன்னரே கைலாயத்திற்கு அவ்வையை கொண்டு சென்று விநாயகர் சேர்த்தார்.விநாயகரை நினைத்து பாடினால் நினைத்த காரியம் கை கூடும். குழந்தைகள் உட்பட அனைவரும் இந்த பாராயணத்தை அவசியம் கற்க வேண்டும், என்றார்.கோயில் நிர்வாக குழுவை சேர்ந்த முரளி, பத்மநாபன், விஜயராகவன், கிருஷ்ணமூர்த்தி ஏற்பாடு செய்தனர். கோயில் மேலாளர் வெங்கடகிருஷ்ணன் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !