சிங்கபெருமாள் கோவிலில் விநாயகர் சிலை விற்பனை துவக்கம்
ADDED :2976 days ago
சிங்கபெருமாள்கோவில் : சிங்கபெருமாள்கோவிலில், விநாயகர் சிலை விற்பனை துவங்கி உள்ளது. செங்கல்பட்டு அடுத்த, சிங்கபெருமாள்கோவில் பகுதியில், கடந்த ஆறு மாதங்களாகவே, 25ம் தேதி வரும், விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக, சிலைகள் தயாரிக்கும் பணியில், ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர். மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளின் அறிவுரை படி, சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. சிலைகளை வாங்க, சிங்கபெருமாள் கோவில் சுற்றியுள்ள கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள், விநாயகர் சிலை வாங்க, முன் பணம் கொடுத்து, பதிவு செய்கின்றனர்.