சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
ADDED :2976 days ago
சங்கராபுரம்: சங்கராபுரம் பகுதிகளிலுள்ள சிவன் கோவில்களில் சனி பிரதோஷ வழிபாடு நடந்தது. சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலம் பாண்டுவனேஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு கோவில் வளாகத்தில் உள்ள நந்தீஸ்வர ருக்கு ரவி குருக்கள், விஸ்வநாத குருக்கள், கணபதி ஆகியோர் முன்னிலையில் பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், தேன் உள்பட 16 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யபட்டு, மகா தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதே போல் தியாகராஜபுரம், முக்கனுர், மஞ்சபுத்துர், முதல்பாலமேடு, கடுவனுர் சிவன் கோவில்களில் சனி பிரதோஷ வழிபாடு நடந்தது.