செல்வவிநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம்
ADDED :3027 days ago
நடுவீரப்பட்டு: சிலம்பிநாதன்பேட்டை செல்வவிநாயகர் கோவில் கும்பாபிஷேகத்தை ஏராளமானோர் தரிசனம் செய்தனர். சிலம்பிநாதன்பேட்டை தெற்கு தெருவில் உள்ள செல்வவிநாயகர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 19 ம் தேதி மாலை விக்னேஸ்வர பூஜை, வாஸ்துசாந்தி, அங்குரார்பணம், கும்ப அலங்காரம், முதல்கால யாகசாலை பூஜை நடந்தது. மறுநாள் 20ம் தேதி காலை மணிக்கு இரண் டாம் கால யாக சாலை பூஜையை தொடர்ந்து காலை 9:30 மணிக்கு கடம் புறப்பாடாகி 9.45 மணிக்கு விமான மகா கும்பாபிஷேகமும், 10:00 மணிக்கு மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.