அருப்புக்கோட்டை கோயில்களில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை கோயில்களில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடந்தன. அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் சொக்கநாதர் கோயில் அருகில் உள்ள படித்துரை விநாயகர் கோயிலில் விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. தன்குளம் விநாயகர் கோயிலில் விநாயகருக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் நடந்தது.
எஸ்.பி.கே. பள்ளி ரோட்டில் உள்ள சித்தி விநாயகர் கோயில், மதுரை ரோட்டில் உள்ள ஆதி பாலசந்திர விநாயகர், பத்ரகாளியம்மன் கோயிலில் உள்ள சக்தி விநாயகர், வடுகர் கோட்டையில் உள்ள விநாயகர் கோயில், எஸ்.பி.கே. கல்லுாரி ரோட்டில் உள்ள ஆனந்த விநாயகர், தெற்கு தெருவில் உள்ள செல்வ விநாயகர், முருகன் கோயில், எஸ்.பி.கே. இன்டர்நேஷனல் பள்ளியில் உள்ள மாணிக்க விநாயகர் கோயில்களில் விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் நடந்தது. பக்தர்கள் காலையில் இருந்தே வர துவங்கினர், பாடல்கள் பாடி விநாயகரை வழிபட்டனர்.