கடவுள் விக்ரஹத்திற்கு உரு ஏற்றுவது எப்படி?
ADDED :3026 days ago
கல்லாக இருக்கும் விக்ரஹத்திற்கு,கும்பாபிஷேக கிரியைகளால் சக்தியூட்டப்படுகிறது. யாகசாலை பூஜையில் வேதவிற்பன்னர்கள் சொல்லும் மந் திரங்களால்விக்ரஹத்தில் மந்திர பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இதன் ஆற்றல் அளப்பரியது. தொடர்ந்து செய்யப்படும் நித்ய பூஜையால் சக்தி நிலைப்படுத்தப்படுகிறது. உருவேறியபின், அருட்சக்தி துலக்கம் பெறும். இதனையேஉருவேறத் திருவேறும் என்று குறிப்பிடுவர்.