பெரியகுளம் மீனாட்சி அம்மன் கோயிலில் பிட்டு திருவிழா
ADDED :2993 days ago
பெரியகுளம்: பெரியகுளம் தென்கரை வாணியவைசியர் சங்கத்தில் பிட்டு திருவிழா நடந்தது. மீனாட்சிஅம்மன் கோயிலில் இருந்து, உற்சவமூர்த்திகளான சுந்தரேஸ்வரர், மீனாட்சியம்மன், சுப்பிரமணியர் நகரின் முக்கிய வீதிவழியாக, வாணியர்சங்க மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டனர். அங்கு அர்ச்சகர்கள், பிட்டுக்கு மண் சுமந்த லீலைகளை செய்து காட்டினர். பிட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.