உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நலம் தரும் நவராத்திரி

நலம் தரும் நவராத்திரி

புரட்டாசி வளர்பிறை பிரதமை தொடங்கி, நவமி வரையுள்ள ஒன்பது நாள் மேற்கொள்வது நவராத்திரி விரதம். சரஸ்வதி, லட்சுமி, பார்வதி என அம்பிகையை முப்பெரும் தேவியராக வழிபட்டு கல்வி, செல்வம், வீரம் ஆகிய மூன்றையும்  பெறுவது இதன் நோக்கம். இந்த விரதமிருப்பவர்கள்  வீட்டில் கொலுமேடை அமைத்து, கும்பத்தில் ஆதிபராசக்தியை ஆவாகனம் செய்து வழிபடுவர்.  ஒன்பது நாள் வழிபட இயலாதவர்கள்   சரஸ்வதி பூஜை அன்று வழிபடுவர். செப். 21ல் நவராத்திரி விரதம் தொடங்குகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !