உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கவர்ச்சியில் மயங்காதீர்கள்

கவர்ச்சியில் மயங்காதீர்கள்

சில மாநில அரசுகள் ஓட்டு வங்கிக்காக, மானியங்களை அள்ளி இறைத்து, மக்களை தங்கள் வசம் வைத்திருக்கின்றனர். இதன் விளைவாக அந்த அரசின் கடன் சுமை ஏறியுள்ளது. வளர்ச்சி திட்டங்கள் நடக்கவில்லை. ரேஷனை ஒழித்து விட்டால், வெளிமார்க்கெட்டில் அத்தியாவசிய பொருட்களின் வரத்து அதிகமாகி விலை குறையும் என்ற அடிப்படை அறிவு மக்களிடம் இல்லை. இலவசம் என்ற கவர்ச்சியில் மயங்கி கிடக்கிறார்கள். ஒரு சம்பவத்தைக் கேளுங்கள் சைரன்ஸ் என்ற தீவில் வசிக்கும் மக்கள் அருமையாக வாத்தியம் வாசிக்க கூடியவர்கள். இந்த இசையில் மயங்கி, அவ்வழியாக செல்லும் பாய்மரக் கப்பல்களில் பயணிக்கும் பயணிகள் அத்தீவில் இறங்குவர். அவர்களை உபசரிக்க, அத்தீவின் மக்கள் மது கொடுப்பர். அதைக் குடித்தவுடனேயே பயணிகளுக்கு மயக்கம் வந்து விடும். உடனே அவர்களை கொன்று, உடமைகளை கொள்ளையடித்து விடுவர்.

இதைக் கேள்விப்பட்ட உலைசஸ் என்ற மாலுமி  தன் கப்பலை அந்த தீவின் வழியாக கொண்டு செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. தன் பயணிகளையும், தன்னையும் காப்பாற்றிக் கொள்ள ஒரு வழி செய்தார். பயணிகளின் காதுகளை மெழுகு வைத்து அடைத்தார். தன்னை பாய்மரத்தோடு சேர்த்து கட்டிக் கொண்டார். கப்பல் அந்த இடத்தை பத்திரமாகக் கடந்தது. இதை போல மக்களும் அரசின் நல்ல திட்டங்களுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். தேவனுடைய பிள்ளைகளான, நமது ஆத்மா பாதுகாக்கப்பட வேண்டும். உலகத்தின் கவர்ச்சி வலைகளில் சிக்கி விடாமல், தேவன் கொடுத்த மூளையை பயன்படுத்தி, வாழ்க்கை கடலை பத்திரமாக கடக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !