உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உயிரை பறிக்க நினைத்தாலும் மன்னியுங்கள்

உயிரை பறிக்க நினைத்தாலும் மன்னியுங்கள்

நபிகள் நாயகம் ஒருமுறை விருந்துக்கு சென்றார். யூதர்கள் அவரை கொலை செய்ய திட்டமிட்டிருந்தனர். ஜைனபு பின்து ஹாரித் என்ற யூதப்பெண், நபிகளுக்கும், அவரது தோழர்களுக்கும் உணவு பரிமாறினார். நபிகள் ஒரு துண்டு இறைச்சியை வாயில் வைத்ததுமே துப்பி விட்டார். தன் தோழர்களையும் தடுத்தார். தோழர்களே! இதில் விஷம் கலந்திருக்கிறது, யாரும் சாப்பிட வேண்டாம், என்றார். இதற்குள் பராபின் மஃரூர் என்ற தோழர் மட்டும் அதைச் சாப்பிட்டு சுருண்டு விழுந்து இறந்தார். விருந்தளித்த பெண்ணிடம், இதை யார் செய்யச் சொன்னார்கள்? என்று கேட்டார் நபிகள். அதற்கு அவள், நீங்கள் உண்மையிலேயே நபி தானா என்பதை அறிய இந்த ஏற்பாட்டை யூதர்களான நாங்கள் செய்தோம். நீங்கள் உண்மை நபி என்பதை நிரூபித்து விட்டீர்கள். இல்லாவிட்டால் இந்த விஷம் உங்களை கொன்றிருக்கும், என்றாள். நாயகம் இதற்காக அவள் மீதோ, மற்ற யூதர்கள் மீதோ கோபிக்கவில்லை. அவர்களை மன்னித்து விட்டார். உயிருக்கு கேடு நினைப்பவர்களைக் கூட மன்னிக்க வேண்டும் என்பதை, மக்களுக்கு எடுத்துச் சொல்லியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !