உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் அக்னி கடலில் கழிவு துணிகள் அபராதம் விதிக்கப்படுமா?

ராமேஸ்வரம் அக்னி கடலில் கழிவு துணிகள் அபராதம் விதிக்கப்படுமா?

ராமேஸ்வரம், ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்தக் கடலில் கழிவு துணிகளை வீசி மாசுபடுத்தும் பக்தர்களுக்கு அபராதம் விதிக்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தினமும் 30 ஆயிரம் பக்தர்கள் வந்து அக்னி தீர்த்த கடலில் நீராடி, கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களை நீராட வருகின்றனர். இதில் அக்னி தீர்த்த கடலில் தனியார் லாட்ஜ், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் கலப்பதாலும், நீராடும் பக்தர்கள் கழிவு துணிகளை வீசுவதாலும் அக்னி தீர்த்தம் மாசடைந்து துர்நாற்றம் வீசுகிறது. இது தொடர்பான பொது நல வழக்கில், அக்னி தீர்த்த கடலில் கழிவு நீர் கலப்பதை தடுத்து, துணிகளை வீசும் பக்தர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டது. அதன்படி கடந்த 3 நாட்களாக அக்னி தீர்த்தம் கடற்கரை அருகில் அமைந்துள்ள தனியார் லாட்ஜ், கழிப்பறை கூடம், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் பாதையை நகராட்சி ஊழியர்கள் தடுத்து நிறுத்தினர். ஆனால் அக்னி கடற்கரையில் புரோகிதர்கள் மூலம் திதி பூஜை, திலக ேஹாமம் செய்யும் பக்தர்கள் அணிந்துள்ள துணிகளை கடலில் துாக்கி வீசுவதால், அக்னி தீர்த்தம் மாசடைந்து துர்நாற்றம் வீசுகிறது. புனித தீர்த்தத்தில் கழிவு துணிகளை வீசக்கூடாது என பக்தரிடம் புரோகிதர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அக்னி தீர்த்த கடற்கரையில் ஒலிபெருக்கியில் தொடர் பிரசாரம் செய்ய நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும். மேலும் மீறி அக்னி தீர்த்தத்தில் கழிவு துணியை வீசும் பக்தர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என இந்து அமைப்பினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !