திருப்பரங்குன்றம் கோயில்களில் செப். 21 முதல் நவராத்திரி
ADDED :2947 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம், திருநகர், பாண்டியன் நகர், ஹார்விபட்டி கோயில்களில் நவராத்திரி விழா செப்., 21ல் தொடங்குகிறது.சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விசாக கொறடு மண்படத்தில் தினமும் ஒரு கொலு அலங்காரத்தில் கோவர்த்தனாம்பிகை அம்பாள் அருள்பாலிப்பார். செப்., 30 மாலை தங்க குதிரை வாகனத்தில் சுவாமி, தெய்வானை அம்மன் அம்பு எய்தல் நிகழ்ச்சி நடக்கும்.திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் செப்., 29 வரை ராஜராஜேஸ்வரி அம்மன் தினமும் ஒரு கொலு அலங்காரத்தில் அருள்பாலிப்பார்.பாண்டியன் நகர் கல்யாண விநாயகர் கோயிலில் செப்., 30 வரை புவனேஸ்வரி அம்பாளும், ஹார்விபட்டி பாலமுருகன் கோயிலில் செப்., 29 வரை துர்க்கை அம்மனும் தினமும் ஒரு கொலு அலங்காரத்தில் அருள்பாலிப்பர்.