முருகவேலவன் சுவாமிக்கு சிறப்பு பூஜை
ADDED :3005 days ago
சங்ககிரி: சங்ககிரியில், ஆவணி கிருத்திகையை முன்னிட்டு, முருகவேலவன் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. சங்ககிரி, மலையடிவாரம் சோமேஸ்வரர் உடனமர் சவுந்தரநாயகி கோவிலில், ஆவணி கிருத்திகையை யொட்டி, முருக வேலவன் சுவாமிக்கு, சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் பூஜைகள் நடந்தன. ஏராளமான பெண்கள் விரதம் இருந்து, சுவாமியை தரிசனம் செய்தனர்.