உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுச்சேரி வேணுகோபால சுவாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா

புதுச்சேரி வேணுகோபால சுவாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா

புதுச்சேரி: முத்தியால்பேட்டை வேணுகோபால சுவாமி கோவிலில், கிருஷ்ண
ஜெயந்தியை முன்னிட்டு சுவாமி வீதியுலா நடந்தது.

முத்தியால்பேட்டை ருக்குமணி, சத்யபாமா சமேத வேணுகோபால சுவாமி கோவிலில்,
6ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி உற்சவம் கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

இதனையொட்டி, தினமும் காலை 9:00 மணிக்கு சிறப்பு ஹோமம் மற்றும் திருமஞ்சனம்
நடந்தது. நேற்று முன்தினம் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, காலை 6:00 மணிக்கு சுப்ரபாதம்,  திருபள்ளியெழுச்சி, திருப்பாவை, விஸ்வரூப தரிசனம், விஷ்ணு நாம அர்ச்சனை,
சாற்றுமுறை நடந்தது.

தொடர்ந்து, மாலை 6:30 மணிக்கு வேணுகோபாலன் வெண்ணத்தாழி அலங்காரத்துடன் உறியடி உற்சவமும், சுவாமி வீதியுலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !