உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கம் காவிரி மகா புஷ்கர விழா: குவிந்த பக்தர்கள்

ஸ்ரீரங்கம் காவிரி மகா புஷ்கர விழா: குவிந்த பக்தர்கள்

திருச்சி: திருச்சி, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் சாலையில் நடந்து வரும் காவிரி மகா புஷ்கர விழாவின் ஐந்தாம் நாள், யாகசாலையில் தன்வந்த்ரி இஷ்டி ஹோமம் நடந்தது.

ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் சாலையில் மகா புஷ்கரம் விழா கடந்த 12ம் தேதி தொடங்கி வரும் 24ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த விழாவின்போது காவிரியில் புனித நீராடினால் மூன்றரை கோடி தீர்த்தத்தில் நீராடிய பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். விழாவின் ஐந்தாம் நாள், ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் யாகசாலையில் தன்வந்த்ரி இஷ்டி ஹோமம் நடந்தது. யாகசாலையில் ஆதிநாயக பெருமாள் தாயருடன் எழுந்தருளினார். தமிழகம் மட்டுமன்றி ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பிறமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் காவிரியாற்றில் புனித நீராடி பெருமாளை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !