உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி விநாயகர் கோவிலில் சிறப்பு ஹோமம்

திருத்தணி விநாயகர் கோவிலில் சிறப்பு ஹோமம்

திருத்தணி : சுந்தர விநாயகர் கோவிலில், நேற்று புராட்டாசி மாதத்தை முன்னிட்டு, சிறப்பு ஹோமம் மற்றும் பூஜைகள் நடந்தது. திருத்தணி முருகன் கோவிலின் துணை கோவிலான சுந்தர விநாயகர் கோவில், அரக்கோணம் சாலை, ம.பொ.சி., சாலை சந்திப்பில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதம் முதல் நாளில் சிறப்பு ஹோமம் மற்றும் பூஜைகள் நடந்து வருகிறது. அந்த வகையில், புரட்டாசி மாதம் முதல் நாளான, நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு ஹோமம் நடந்தது. இதற்காக கோவில் வளாகத்தில் யாகசாலையில், ஐந்து கலசங்கள் வைத்து சிறப்பு ஹோமம் நடந்தது. தொடர்ந்து காலை, 6:00 மணிக்கு மூலவருக்கு பால், பன்னீர், தேன் மற்றும் பஞ்சாமிர்தம் போன்ற சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. பின், வண்ண மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிப்பட்டனர். கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மாலையில், மூலவருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் குருக்கள் துரைராஜ் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !